ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் விருத்திராஷ்ரம், நசரத்பேட்டை, பூவிருந்தவல்லி

மக்கள் சேவையே மஹேசன் சேவை. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடமானது பல்வேறு சேவைகளை அனைத்து மக்களையும் சென்று அடையும் வன்னம் பல வழிகளில் செயல் படுத்தி வருகின்றது. அந்த வகையில் முதியவர்களுக்கென்று பல்வேறு இடங்களில் முதியோர் இல்லம் துவக்கியுள்ளது. பூவிர்ந்தவல்லி அருகே சென்னை-பெங்கலூரு சாலையில் (N.H.4), ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அமைந்துள்ள முதியோர் இல்லம்(விருத்திராஷ்ரம்), நசரத்பேட்டை பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளால் 1993 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

Vriddhashram at Nazarathpet

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் "தர்ம ப்ரபோதனா ட்ரஶ்ட்" தற்போது இந்த இல்லத்தை நடத்தி வருகிறது. 49 நபர்கள் வசிக்ககூடிய இந்த முதியோர் இல்லத்தில் தற்போது உள்ள நபர்களின் எண்ணிக்கை 39, அதில் 29 பெண்கள் 10 ஆண்கள். தினசரி காலை சுப்ரபாதம்/பக்தி பாடல்கள்/கர்னாடக சங்கீததுடன் துவங்கி காலை 5: 30 am மணிக்கு காபி வழங்கபடுகின்றது. மதிய உணவு காலை 10: 30 am மணிக்கும் மாலை 3: 30 pm க்கு டீ உடன் சிற்றுண்டியும் வழங்கப்படுகின்றது. அனைத்து அறைகளும் மின் விசிறி, மின் விளக்குகள் மற்றும் பொழுது போக்கு அம்சமான, தொலைகாட்சி பெட்டி கேபிள் வசதியுடன் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனியாக படுக்கையுடன் கூடிய கட்டில் மற்றும் தங்களுடைய உடமைகளை வைக்க ஒரு இரும்பு அலமாரியும் இருக்கிறது. இங்கு உள்ளவர்கள் தினசரி மாலை 3:30 மணிக்கு விஷ்ணு சஹஸ்ரநாமமும் தோடகாஷ்டகமும் பிரார்தனை அறையில் பாராயணம் செய்வார்கள். பிள்ளையார் சதுர்த்தி, கோகுலாஷ்டமி போன்ற பண்டிகைகள் உற்சாகத்துடனும் பக்தியாகவும் உருக்கமாகவும் கொண்டாடப்படுகின்றது. ஸ்ரீ N.பத்மநாப ஐயர் முதியோர் இல்லத்தின் நிர்வாகியாக உள்ளார். நன்கொடையாளர்களுக்கு உடனுக்குடன் நன்கொடை இரசீது வழங்கப்படுகிறது. முதியோர் இல்லம் வாசிகள் இறை திருவடி அடைந்த பின் அவர்களின் உற்றார் உறவினர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள படுகிறார்கள். அந்திம சம்ஸ்காரதிர்கு யாரும் வராமல் இருந்தால் அந்த பொறுப்பை ஸ்ரீ மடமே ஏற்று நடத்துகின்றனர்.


Vriddhashram at NazarathpetVriddhashram at Nazarathpet

Vriddhashram at NazarathpetVriddhashram at Nazarathpet
Vriddhashram at NazarathpetVriddhashram at Nazarathpet

உயர்ந்த குணம் மற்றும் உதவி கரம் நீட்டுபவர்களின் பங்களிப்பு:

இரண்டு சுடு நீராக்கிகள் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்காக ஒருவரால் வழங்கப்பட்டது.

ஸ்ரீ காஞ்சி மடத்தின் தொண்டூழியர் ஸ்ரீ. நாகராஜன் அவர்கள் "பிடி அரிசி திட்டம்" (ஒவ்வொரு வீடாக சென்று கைபிடி அளவு அரிசி பெருதல்) மூலம் பெற்ற அரிசி மூட்டைகளை முதியோர் இல்லத்திற்க்கு கொடுத்து உதவி வருகிறார். சமாராதனை திட்டம் ஸ்ரீ மடத்தில் Rs. 2500/- க்கு நடந்து வருகிறது. அன்று வட, பாயாசம் மற்றும் சில விசேஷமான பதார்தங்களான கூட்டு, பச்சடி, கரி முதலியன முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு மக்கள் தங்களின் ஜென்ம நக்ஷத்திரம் போதும் மற்றும் தங்கள் பெற்றோரின் நினைவு நாளின் போதும் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு உணவு கொடுத்து அன்றைய நாளை முழுமையாக்கி கொள்கிறார்கள்.

Vriddhashram at NazarathpetVriddhashram at Nazarathpet

ஆயுர்வேத கல்லூரியின் மருத்துவர்களும் மற்றும் அங்கே பயிலும் மாணவர்களும் முதியோர் இல்லத்தை சேர்ந்தோர்க்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர். கல்லூரி நிர்வாகமும் அயுர்வேத மருந்துகள் கொடுத்து உதவி வருகின்றது. முதியோர் இல்லத்தை சேர்ந்தவர்கள் உடல்நலங்குன்றும் போது மருத்துவ உதவிகள் செய்து வருகிறது.

சென்னையை சேர்ந்த ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் முதியோர் இல்லத்தை சேர்ந்தோர்க்கு வாரம் மூன்று முறை ரொட்டி, ரச்க்கு போன்றவை கொடுத்தும் மற்றும் மாதந்தோரும் சலவைதூள் கொடுத்தும் உதவி வருகின்றன. இரண்டு சலவை கருவிகள் முதியோர் இல்லத்திர்க்கு உயர் குணம் கொண்ட ஒருவரால் நன்கொடையாக வந்துள்ளது.

விருத்திராஷ்ரம் மேலாளரை தொடர்பு கொள்ள 044-26491822

கலவை மற்றும் ஸ்ரீ காலஹஸ்தியிலும் ஸ்ரீ மடம் இது போன்ற விருத்திராஷ்ரங்கள் நடத்தி வருகின்றது.


View Larger Map

Click here for English version of this article


ஸ்ரீ சங்கர மடம் கிளைகள்